திருட்டுப் பழி போட்ட வேதனையில் இளம்பெண் தற்கொலை

8049பார்த்தது
திருட்டுப் பழி போட்ட வேதனையில் இளம்பெண் தற்கொலை
திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளானதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஜசீலா (24). இவர் பக்கத்து வீட்டுக்காரரின் 9 சவரன் தங்க நகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக கூறி மன வேதனையில் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டு விஷம் குடித்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி