ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சைனஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்விக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு நடந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான சிகிச்சையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி அவர்கள் வேதனை தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.