மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் அதிகாலை 3.30 மணிக்கு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக அந்த இளைஞர் துன்புறுத்தியுள்ளார். ஜன., 31ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையிலும், போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.