தெலங்கானா கரீம்நகரில் தாயை இழந்த துயரைத் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் கடந்த மூன்று நாட்களாக தாயின் கல்லறை அருகே இரவும் பகலும் தூங்கி வருகிறார். இது உள்ளூர் மக்கள் மற்றும் குடும்பத்தினரை கவலையிலும் பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பாதுகாப்பும் மருத்துவ சிகிச்சையும் வழங்க மகளிர் நல அலுவலர்கள் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.