கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடையில், மொபைல் வாங்குவது போல் நடித்து இளம்பெண் ஒருவர் ஐ-போனை திருடிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. கடையில் இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.