"இளைஞர்கள் தவெக பக்கம் கிடையாது" என முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். மேலும் அவர் இன்று (நவ.8) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளைஞர்கள் தவெக பக்கம் இல்லை. இளைஞர்கள் திமுக பக்கம், உதயநிதி பக்கம் தான் இருக்கிறார்கள்” என்றார். திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.