ஒரு இயக்கத்தின் பின்னால் உறுதியாக வந்து சேரும் இளைஞர்களே அதன் நிரந்தர படை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார். கட்சி அழைப்பு விடுத்தால் இலக்கை நோக்கி பாயும் ஈட்டி முனை போல இளைஞர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். 5 பேருடன் தொடங்கிய திமுக இளைஞரணி இன்று 5 லட்சம் பேருடன் பயணித்து வருவது இயக்கத்தின் வலிமையை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.