உத்தரப் பிரதேசத்தின் ஜாண்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாரில், இளைஞர் ஒருவர் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. போதையில் இருந்த அமன் அகர்வால் என்பவர், அங்கு பணியாற்றி வந்த பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவான நிலையில், அமன் அகர்வாலை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.