அம்பத்தூர் அருகே பிரியங்கா (25) என்பவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிய சந்தோஷ் (28), தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி அவரிடம் இருந்து 9 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. நகை, பணத்தை திருப்பிக் கேட்டபோது, தான் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் பேரன் எனக்கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்தனர். விசாரணையில் அவர் எம்எல்ஏவின் பேரன் இல்லை என்பது தெரியவந்தது.