காதலி புறக்கணித்ததால் ரயில் மீது கல் வீசிய வாலிபர் கைது

6947பார்த்தது
காதலி புறக்கணித்ததால் ரயில் மீது கல் வீசிய வாலிபர் கைது
சென்னையில் காதலி புறக்கணித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், ரயில் மீது கல்வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்த 19 வயது வாலிபரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிபட்ட அவர், விரக்தியில் மூன்று முறை கல் வீசியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.