திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில், ஐ.டி ஊழியர் அஜித் (26) என்பவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்த அஜித்தின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் அவர், "நான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தேன். அங்குள்ள பல உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். இதுவே எனது தற்கொலைக்கு காரணம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.