உலகின் நம்பிக்கையாகவும், மாற்றத்தின் சக்தியாகவும் திகழும் இளைஞர்களுக்கு சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகளை முதலமைச்சர்
விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “புதிய சிந்தனைகள், துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையுடன் இளைஞர்கள் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள். சவால்களை வென்று சாதனைகளை படைத்து, உலகின் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.