நாமக்கல் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி 19 வயது பொறியியல் முதலாம் ஆண்டு மாணவன் ஹர்ஷவர்தன் உயிரிழந்தார். தேர் நகர்ந்தபோது அதன் பின்பகுதியில் நின்றிருந்த ஹர்ஷவர்தன் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், கல்லூரி மாணவர் சஷ்டிகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனைக்கு நேரில் சென்று பெற்றொர்களுக்கு ஆறுதல் கூறினார்.