விஜய் கூட்டத்தில் இளைஞர் மரணம்.. போலீஸ் வழக்குப்பதிவு

7779பார்த்தது
சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று (பிப்., 13) விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சுராஜி என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரில் விஜய் பரப்புரையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி