திருச்சி பீமா நகர் கீழ தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தாமரைச்செல்வன், காவலர் குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்த ஒரு கொலை கும்பல், காவலர் வீட்டுக்குள் ஒளிந்திருந்த தாமரைச்செல்வனை உள்ளே புகுந்து வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. இச்சம்பவத்தின் போது, காவலரும் அவரது மகளும் சோபாவில் அமர்ந்திருந்ததால், கண் முன்னே நடந்த கொலையால் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.