தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட
சஞ்சய் (18), பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், நேற்றிரவு (மே.17) பெண்ணின் தந்தை குமார் மற்றும் உறவினரான இருவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி: Newstamil24x7