கோவை மாவட்டம் சூலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் என்பவரை, கஞ்சா போதையில் இருந்த
சஞ்சய் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொன்று சென்ற நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.