பீகார் மாநிலத்தில், காவல்துறை தேர்வு எழுத வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போதிய ரயில்கள் ஏற்பாடு செய்யவில்லை எனக்கூறி பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரயிலை மறித்து கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.