பாஜக பிரமுகரும், முன்னாள் பைக் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா மற்றும் அவரது குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் யூடியூபர் முக்தார் ஆபாசமாக பேசியிருந்தார். இது குறித்து அலிசா அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தாரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் 24ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்