ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில், இன்று (பிப்.8) தவெக தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றுள்ளார். இதுகுறித்தான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டி - விஜய் ஆகியோரது தொண்டர்களும், ரசிகர்களும் இருவரது புகைப்படங்களை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.