மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றார் யும்னம் கேம்சந்த் சிங்

9பார்த்தது
மணிப்பூரில் அமையும் புதிய அரசில் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் இன்று (பிப்., 04) பதவியேற்றார். மெய்தி, குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக, ஓராண்டுக்கு முன்பு பாஜகவின் பைரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே தற்போது புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அஜய்குமார் பல்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி