பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சிக்கந்தர் ராசா தலைமையிலான அணியில் பிரையன் பென்னட், வெலிங்டன் மசகட்சா, பிரெண்டன் டெய்லர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.