
கர்ப்பிணி மருமகளை கழுத்தை அறுத்துக்கொன்ற மாமனார்
கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டம் சிர்வாரா தாலுகா சிக்கஹனகி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மாமனார் சித்தப்பா (50) தனது ஐந்து மாத கர்ப்பிணி மருமகள் ரேகா நாகராஜ் (24) என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்தார். பலத்த காயமடைந்த ரேகா வீட்டின் முன் திண்ணையில் உயிரிழந்தார். குற்றம்சாட்டப்பட்ட மாமனார் கைது செய்யப்பட்டு, கவிதல் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.




























