
ஓபிஎஸ் ஆதரவாளர் செஞ்சி ஏழுமலை அதிமுகவில் இணைந்தார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் எம்பியுமான செஞ்சி ஏழுமலை மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று (மார்ச் 03) நேரில் சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
















