
நைஜீரியாவில் கிராமத்தின் மீது துப்பாக்கி சூடு: 30 பேர் பலி
வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாகாணத்தின் கவுரா பகுதிக்கு உட்பட்ட நரிடான் கிராமத்தில் நேற்றிரவு ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் இந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெற்கு கடுனா அமைதி மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க் அமைப்பின் தலைவர் தெரெக் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

































