
இந்திய விமானப்படையின் கூட்டு ராணுவ பயிற்சி: சர்வதேச நாடுகள் பங்கேற்பு
இந்திய விமானப்படை சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 'தரங் சக்தி-2026' என்ற பலதரப்பு கூட்டு பயிற்சி "ஒத்துழைப்பில் வலிமை" என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நட்பு நாடுகளிடையேயான ராணுவ உறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடைபெறும் இப்பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிநவீன போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.



































