சென்னை மெட்ரோ-Chennai Metro

ரயில்வே சரக்கு போக்குவரத்து உயர்வு: ரூ.1,137 கோடி கூடுதல் வருவாய்

ரயில்வே சரக்கு போக்குவரத்து உயர்வு: ரூ.1,137 கோடி கூடுதல் வருவாய்

இந்திய ரெயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. ஜூலை மாதத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து மூலம் 14.13 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 9% வளர்ச்சியாகும். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.1,137 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இரும்புத் தாது, உரங்கள், உணவு தானியங்கள், நிலக்கரி போக்குவரத்து அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி வினியோகம் 20% அதிகரிக்கப்பட்டு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.