காங்கிரஸ்-Congress

அணை நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் ராகுலிடம் பேச வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அணை நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் ராகுலிடம் பேச வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில், காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்சினைகளால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன. முந்தைய அரசு அரசியல் மட்டுமே செய்தது, தீர்வு காணவில்லை. பல ஆண்டுகளாக அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா மாநில முதல்-மந்திரிகளின் ஒத்துழைப்போடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் துயரை துடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.