
தமிழகத்தில் இருந்து அதிக முறை எம்பியான தலைவர்கள்
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு (மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டையும் சேர்த்து) அதிக முறை சென்ற தலைவர்கள் என்ற பெருமையை திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பெற்றுள்ளார். அவர் ஒட்டுமொத்தமாக 8 முறை எம்பியாகப் பணியாற்றியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து இந்த வரலாற்றுச் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



































