தமிழ் படம்-Tamil movie

ராஜாஸ் பிளேலிஸ்ட் படப்பிடிப்பு நிறைவு: இளையராஜா குடும்ப வாரிசு அறிமுகம்!

ராஜாஸ் பிளேலிஸ்ட் படப்பிடிப்பு நிறைவு: இளையராஜா குடும்ப வாரிசு அறிமுகம்!

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வெங்கட் பிரபு கதை எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சுஜித் என் சுப்ரமணியம் திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்கொள்கிறார். எலிபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கும் இப்படத்தில் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் பாடல்களை மையமாகக் கொண்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு வீடியோ வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவை அறிவித்துள்ளது.