
எம்எல்ஏ-க்களுக்குத் தீபாவளிப் பரிசுகளை வழங்கிய முதல்வர் விஜய்
தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பட்டு வேட்டி, பட்டுப் புடவையைத் தீபாவளிப் பரிசாக முதலமைச்சர் விஜய் வழங்கினார். மக்கள் திட்டங்களைத் தொகுதிதோறும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தவெக மீதான மக்களின் அமோக வரவேற்பைப் பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திசைதிருப்பப் பார்ப்பதாகக் கூறினார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நன்றி: நியூஸ் 18



























