
சென்னையில் மதுபான ஃபிளேவர் ஐஸ்க்ரீம் - விசாரணை
சென்னை திருமங்கலம் 'SANDY NATURAL' கடையில் ரெட் ஒயின், வோட்கா, விஸ்கி பிளேவர்களில் ஐஸ்கிரீம் விற்பதாக இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் புகார் எழுந்தது. குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்கிரீமில் மது பிளேவரா என அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். ஐஸ்கிரீம் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆய்வு முடிவிலேயே உண்மை தெரியவரும். நன்றி: பாலிமர்

















